பதிவு செய்த நாள்
26
செப்
2018
12:09
வந்தவாசி: வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு, புதிதாக திருத்தேர் செய்யும் பணி துவங்கியது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், ஜலகண்டேஸ்வரர், ரங்கநாத பெருமாள் கோவில்களுக்கு, இரண்டு மரத்தேர்கள் இருந்தன.
இதில், ஜலகண்டேஸ்வரர் கோவில் தேரோட்டம், ஆண்டுதோறும், மாசி மாதமும், ரங்கநாத பெருமாள் கோவிலின் தேரோட்டம் பங்குனி மாதமும் நடக்க உள்ளது. கடந்த, பத்து ஆண்டுகளுக்கு முன், இந்த தேர்கள் சேதமடைந்ததால், தேரோட்டம் நடக்கவில்லை.
இதை அடுத்து, புதிய தேர் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி, தேர் திருப்பணி குழுவினர், மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், மக்கள் பங்களிப் புடன், இரண்டு தேர்களுக்கும், தலா, 5.5 அடி விட்டமும், ஒரு அடி அகலமும் கொண்ட, எட்டு இரும்பு சக்கரங்கள், நான்கு அச்சுகள் ஆகியவை, ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் செய்யப்பட்டு, எடுத்து வரப்பட்டன. இரண்டு தேர்களையும், புதிதாக செய்ய தமிழக அரசு, 60.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. முதற்கட்டமாக, 30.50 லட்சம் ரூபாயில், ரங்கநாதப் பெருமாள் கோவில் தேர் செய்யும் பணி, துவங்கியது.