முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே மகிண்டி கிராம முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்தும், முளைப்பாரி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
*செல்வநாயகபுரத்தில் செல்வியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாயையொட்டி கிராமமக்கள் முளைப்பாரி தூக்கி ஆற்றுப்பாலம்,பேருந்து நிலையம், காந்திசிலை வழியாக 3 கி.மீ வரை கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் சங்கரபாண்டி ஊரணியில் கரைத்தனர்.
*மாரந்தை கிராமத்தில் அரியநாச்சியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவில்,பக்தர்கள் முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கிராமத்தை சுற்றி வந்தனர். ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும்,பெண்கள் கும்மியடித்தனர்.
* ஒரிவயல் கிராமத்தில் உலக அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரங்கண் பானை கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கிராம மக்கள் முளைப்பாரி தூக்கி ஊர்வலமாக வந்து ஊரணியில் கரைத்தனர்.
*பூக்குளம் கிராமத்தில் தம்புராட்டி அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கிராமத்தை சுற்றி வந்து ஊரணியில் கரைத்தனர்.