காடுபட்டி:குருவித்துறை குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு அக்., 2ல் லட்சார்ச்சனை துவங்குகிறது.இங்குள்ள சித்திர ரத வல்லபபெருமாள் கோயில் முன் சுயம்புவாக குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. அக்., 4இரவு துலாம்ராசியில் இருந்து விருச்சிகராசிக்கு குருபகவான் இடபெயர்ச்சியாகிறார். இதை முன்னிட்டு அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகார பூஜையாகஅக்.,2காலை 10:35 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி, அக்.,3 இரவு 8:00மணிக்கு முடிகிறது.பங்குபெறுவோர் 300 ரூபாய் செலுத்தினால் குருபகவான், சக்கரத்தாழ்வார் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலருடன் பிரசாத பை வழங்கப்படும். 100 ரூபாய் செலுத்துபவர்களுக்கு பிரசாதம் மட்டும்வழங்கப்படும். குருவித்துறை கோயில், தென்கரைமூலநாதர் சுவாமி கோயிலில் லட்சார்ச்சனை டிக்கெட் கிடைக்கும். ஏற்பாடுகளை தக்கார் ஜெயதேவி, செயல் அலுவலர்செந்தில்குமார் செய்துவருகின்றனர்.