பதிவு செய்த நாள்
02
அக்
2018
11:10
நாமக்கல்: வளையப்பட்டி பெருமாள் கோவிலில், வரும், 6ல் கருடசேவை நடக்கிறது. நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், புரட்டாசி, மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, வரும், 6ல் கருட சேவை நடக்கிறது. காலை சிறப்பு அலங்காரம், 7:00 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை; மாலை, 6:00 மணிக்கு திருக்கோடி தீபம் ஏற்றப்படுகிறது. பின், உற்சவர் பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் வீதி உலா வருகிறார். இரவு, 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.