செத்தவரை ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தருக்கு அவதார திருநாள் விழா நாளை நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செத்தவரை - நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோனசித்தர் ஆசிரமத்தில் நாளை (3ம் தேதி) ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தரின் அவதார திருநாள் விழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு காலை 10.30 மணிக்கு சிறப்பு ஹோமம், 12 மணிக்கு மகேஸ்வர பூஜையும், மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்க உள்ளது. தொடர்ந்து ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோனசித்தரின் ஆசி உரையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை டிரஸ்டி மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.