காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருக்கயிலாய பரம்பரை திருவாடுதுறை ஆதீனம், சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மையம் சார்பில், தென்னிந்தியா முழுவதும், சிவாலயங்களில் பன்னிரு திருமுறைகள் முற்றோதுதல் நடத்தப்படுகிறது.
அதன்படி, 411வது பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்தது. இதில், அமைப்பாளர் வி.பழனி தலைமையில், சிறப்பு பூஜைகள் செய்த சிவனடியார்கள், திருவாசகம், திருக்கோவையார் பாடல்களை பாடினர்.