பதிவு செய்த நாள்
03
அக்
2018
01:10
ஊத்துக்கோட்டை: அஷ்டமி தினத்தை ஒட்டி, காலையில் பைரவருக்கு சிறப்பு பூஜையும், மாலையில், துர்க்கைக்கு ராகு கால பூஜையும் சிறப்பாக நடந்தது. ஊத்துக்கோட்டை ஆனந்த வல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருக பெருமான், அய்யப்பன், துர்க்கை, கால பைரவர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
நேற்று (அக்., 2ல்), அஷ்டமி தினத்தை ஒட்டி, கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
நேற்று (அக்., 2ல்), , செவ்வாய்க்கிழமை ஆனதால், மாலை, துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை நடந்தது. பிற்பகல், 3:00- மணி முதல், மாலை, 4:30 மணிக்கு, துர்க்கைக்கு சிறப்பு அபி ஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.முன்னதாக, பெண்கள் துர்க்கை அம்மனை போற்றி பாடல்கள் பாடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.