புன்செய்புளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் அக்.,2ல் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2018 01:10
புன்செய்புளியம்பட்டி: அண்ணாமலையார் கோவிலில், உலக நலன் வேண்டி லட்சார்ச்சனை நடந்தது. புன்செய்புளியம்பட்டி, சத்தி சாலையில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. இங்கு, லட்சார்ச்சனை விழா, நேற்று (அக்.,2ல்) காலை, 6:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. 9:00 மணிக்கு, உலகநலன் வேண்டி கும்பகலசம் வைத்து, மலர்கள் தூவி லட்சார்ச்சனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.