பதிவு செய்த நாள்
04
அக்
2018
12:10
உளுந்தூர்பேட்டை: ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழித் திடவும், எல்லா வளங்களும் பெறுவதற்காக சண்டி ஹோமம் நேற்று (அக்., 3ல்) நடந்தது.
அதனையொட்டி நேற்று முன்தினம் (அக்., 2ல்) இரவு 7;00 மணிக்கு பூர்வாங்க பூஜையும், நேற்று (அக்.,3ல்) காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடந்தது. பின்னர் ஊர்வலமாக சென்று விநாயகருக்கு கட தீர்த்த அபிஷேகம் நடந்தது.
நேற்று (அக்., 3ல்) மதியம் 2:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை சுவாஷினி பூஜை, சுமங்கலி பூஜை, வடகு பூஜை, கோ பூஜை, 13 பூர்ணாஹதி பூஜை, 700 சுலோகங்களுடன் அம்மன் துதிப்பது. வசோதரை ஹோமத்துடன் பூஜை நிறைவு பெற்றது. ஹோம நிகழ்ச்சிகளுக்கு ஸ்ரீராமகிருஷ்ண மட தலைமை மாதாஜி அனந்தானந்தஜி மகாராஜ், ஸ்ரீசாரதா ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹோமத்தில் ஆசிரம சகோதரிகள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.