பதிவு செய்த நாள்
04
அக்
2018
12:10
உடுமலை:உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில், இன்று (அக்.,4ல்) குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடக்கிறது.
நவகிரங்களில் ஒன்றான குரு, இன்று (அக்.,4ல்) இரவு, 10:00 மணிக்கு மேல், துலாம் ராசியிலி ருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இதையொட்டி, சுற்றுப்பகுதி கோவில்களில் யாகம் மற்றும் சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடக்கிறது.
உடுமலை, முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில், மதியம், 1:00 மணி முதல், இரவு, 10:30 மணி வரை குருபெயர்ச்சி யாகம் நடக்கிறது. தொடர்ந்து, நவகிரகங்க ளுக்கும், தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கும், சிறப்பு அபிேஷகம் நடக்கிறது.
பரிகார ராசிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பழனியாண்டவர் நகர் சித்தி விநாயகர் கோவிலில், இரவு, 8:30 மணி முதல் சிறப்பு அபிேஷகம் அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடக்கிறது.