பதிவு செய்த நாள்
04
அக்
2018
12:10
சென்னை:சென்னை, சிட்லப்பாக்கம், எம்.சி.நகர், மங்கள விநாயகர் கோவிலில் இன்று, (அக்.,4ல்) குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
இன்று (அக்.,4ல்) இரவு, 7:41 மணிக்கு, குரு பெயர்ச்சி நிகழ்கிறது. துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு, குருபெயர்ச்சி நடக்கிறது.அதை முன்னிட்டு, சென்னை சிட்லப்பாக்கம், எம்.சி.நகர், மங்கள விநாயகர் கோவிலில், இன்று அக்.,4ல் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.மாலை, 5:00 மணிக்கு, கலச ஸ்தாபனம், கணபதி மற்றும் நவகிரக சாந்தி ஹோமம் நடக்கிறது.
தொடர்ந்து, 6:45 மணிக்கு, அபிஷேகம்; 7:00 மணிக்கு, சங்கல்பம்; 7:45 மணிக்கு, மஹா தீபாராதனை ஆகியவை நடைபெறும். மேலும், 10ம் தேதி முதல், 19ம் தேதி வரை, நவராத்திரி திருவிழாவை நடத்த, கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து உள்ளனர்.