மானாமதுரை தஞ்சாக்கூர் முருகன் கோயிலை திறக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2018 12:10
மானாமதுரை:மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் முருகன் கோயிலைதிறக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தஞ்சாக்கூரில் அரசு புறம்போக்கு இடத்தில் கடந்த 2015ம் ஆண்டுமுருகன் கோயில் கட்டப்பட்டு 2016ம் ஆண்டு கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கோயிலில் பூஜாரியாக இருக்கும் பாலசுப்பிரமணி என்பவருக்கும் கிராமத்தில் உள்ள சிலருக்கும் ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் பழையனூர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில்பழையனூர் போலீசார் ஆர்.டி.ஓ.,விசாரணைக்கு அனுப்பி வைத்தனர் இதனையடுத்து கோயில்கடந்த 2 வருடங்களாக பூட்டிக்கிடக்கிறது.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், தஞ்சாக்கூரில் கட்டப்பட்ட முருகன் கோயில் பூஜாரிக்கும்,சிலருக்கும் ஏற்பட்ட மோதலால் தற்போதுகிராமத்தினர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த முடியவில்லை மேலும் திருமணங்களும் நடத்தமுடியவில்லை.ஆகவே மாவட்ட நிர்வாகத்தினர் கிராம மக்களின் நலன் கருதி பூட்டிக்கிடக்கும்கோயிலை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.