பதிவு செய்த நாள்
05
அக்
2018
12:10
மேட்டுப்பாளையம்:உலக நன்மைக்காகவும், மக்கள் மேன்மைக்காகவும், மேட்டுப்பாளை த்தில் நேற்று (அக்.,4ல்) குரு பெயர்ச்சி யாகம் நடத்தப்பட்டது.
ராஜயோக சுப்ரமணியர் ஜோதிட ஆராய்ச்சி நிலையம், அகில உலக அய்யன் திருவள்ளுவர் ஜோதிட ஆன்மிக நற்பணி குழு, உலக சமாதான மையம் உட்பட பல அமைப்புகள் ஒன்றிணைந்து மேட்டுப்பாளையத்தில் குரு பெயர்ச்சி யாகம் நடத்தின. பஜனை கோவில் வீதியில் உள்ள கோதண்டபாணி பஜனை மடத்தில், உலக நன்மைக்காகவும், மக்கள் மேன்மைக்காகவும் இந்த யாகம் நடந்தது.
குபேர லிங்கத்துக்கு மஹா ருத்ரயாகம், 108 மூலிகை திரவியங் களால் மஹா ருத்ராபிேஷகம், மஹா சக்தி, தச மஹா வித்யா யாகம், மந்திர பாராயணம், 108 சங்காபிேஷகம் செய்யப் பட்டது. ரவிசந்திர காளிதாஸ், யாகத்தை நடத்தினார்.