பதிவு செய்த நாள்
05
அக்
2018
12:10
கோவை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் வரும், 21ம் தேதி ஷீரடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.ஷீரடி சாய்பாபா நூற்றாண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வரும், 21ம் தேதி மதுரையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக ஷீரடிக்கு செல்கிறது.கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து புறப்படுவோர், ஈரோட்டில் இருந்து பயணிக் கலாம். ஷீரடியில் உள்ள பாபா சமாதி, பண்டரி புரம், பாண்டுரங்கன் தரிசனம், மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திரர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏழு நாட்கள் யாத்திரைக்கு, நபர் ஒருவருக்கு, 6,615 ரூபாய் கட்டணம். விபரங்களுக்கு, 90031 40655 என்ற எண்ணிலும், தீதீதீ.டிணூஞிtஞிtணிதணூடிண்ட்.ஞிணிட் எனும் இணைய தள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.