பதிவு செய்த நாள்
05
அக்
2018
12:10
அவலூர்பேட்டை:அவலூர்பேட்டையில் ஐந்து கோவில்களை சேர்ந்த பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.மேல்மலையனூர் தாலுகா, அவலூர்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் (அக்., 3ல்) மரக்கோணம், வேப்பம்பட்டு, வளத்தி, பருதிபுரம், கரடிக்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதை முன்னிட்டு காலை 11.00, மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 4.00, மணிக்கு உய்யாளி சேவை, இரவு சுவாமிக்கு திருக்கல்யாண மகோற்சவம், வேத, நாத, கீத சமர்ப்பணம் நடந்தது. பின்னர் 5 பெருமாளும் நாச்சியார்களுடன் தனித்தனி வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலித்தனர். உற்சவத்திற்கு திருக்கோவிலூர் ஜீயர் முன்னிலை வகித்தார். செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான், ரவிராமானுஜ தாசர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.