பதிவு செய்த நாள்
05
அக்
2018
01:10
திருவாரூர்: நீடாமங்கலம் அருகே, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், நேற்று இரவு குருபெயர்ச்சி விழா நடந்தது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், தனிசன்னத்தியில்,பக்தர்களுக்கு, குருபகவான் அருள்பாலிக்கிறார். குருபெயர்ச்சியை ஒட்டி, நேற்றுமுன்தினம் அதிகாலை, குருபரிகார யாக பூஜைகள் நடந்தன. நேற்று இரவு, 10:05 மணிக்கு, துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு, குருபகவான் இடம் பெயர்ந்தார். இதை ஒட்டி, மூலவர் மற்றும் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில், ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று, கொட்டும் மழையிலும் குருபகவானை வழிபட்டனர். திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இருந்து, ஆலங்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.