பதிவு செய்த நாள்
06
அக்
2018
12:10
வீரபாண்டி: கரபுரநாதர் கோவிலில், வரும், 11ல், சங்காபிஷேககத்துடன் பரிகார பூஜை நடக்கயுள்ளது. சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், குருபெயர்ச்சி விழா நடந்து வருகிறது. முக்கிய சிவாலயங்களில், வாக்கிய பஞ்சாங்கப்படி, நேற்று முன்தினம் (அக்.,4ல்), குரு பெயர்ச்சி பரிகார பூஜை நடந்தது. திருக்கணித பஞ்சாங்கப்படி, வரும், 11 இரவு, 7:20 மணிக்கு, துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அன்று, கரபுரநாதர் கோவிலில், சிறப்பு யாக பூஜை நடக்கவுள்ளது. மாலை, 3:00 மணிக்கு, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி, மலர்களால் அலங்கரித்து, யாகபூஜையில் வைத்து, பரிகார ஹோமம் நடக்கும். 27 நட்சத்திரக் காரர்களுக்கு சங்கல்பம் செய்து, பூர்ணாஹூதி முடிந்தபின் யாகபூஜையில் வைத்த கலசங்கள் மற்றும் சங்குகளிலுள்ள புனிதநீரால், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்து, தீபாராதணை காட்டப்படும். குருபெயர்ச்சியால், மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்ப ராசிக்காரர்கள், பரிகாரம் செய்ய வேண்டும். அவர்கள், பரிகார பூஜையில் பங்கேற்க, கோவில் சிவாச்சாரியர்களிடம், முன்பதிவு செய்து கொள்ளலாம்.