பதிவு செய்த நாள்
06
அக்
2018
12:10
விழுப்புரம்:விழுப்புரம் அருகே பூவரசன்குப்பம் அமிர்தவள்ளி நாயகி சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் வரும் 18ம் தேதி நவராத்திரி ஹோமம் நடக்கிறது.
அதனையொட்டி, வரும் 9ம் தேதி மாலை 6.00 மணிக்கு ஹோமம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஹோமம் நடக்கிறது. வரும் 18 ம் தேதி இரவு 7.30 மணிக்கு மகாபூர்ணாஹூதி நடக்கிறது. பின் பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.தினந்தோறும் நடைபெறும்
ஹோமத்தில், பகை விலகுதல், உடல் நல பிணியில் இருந்து நீங்க சுதர்சனம், தன்வந்திரி ஹோமங்களும், பிள்ளைகள் நன்றாக பயில ஹயக்கிரீவருக்கும், வியாபாரத்தில் லாபம் பெருக மகாலட்சுமிஹோமங்கள் நடக்கிறது.
மகாலட்சுமி ஹோமத்தில் துர்கா சுவாமி பெயரை 1 லட்சம் முறை ஜெபிக்கும் ஹோமமும் நடக்கிறது.ஹோமத்தில், நெய், பழங்கள், தேன், பட்டுபுடவை போடுவதால், பக்தர்கள் ஆலயத்திற்கு இந்த பொருட்களை வழங்கி பெருமாளின் அருளை பெற கோவில் நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பூஜைகளுக்கான ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஜெயக்குமார், அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் ஆலய பணியாளர்கள், அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.