குன்னூர் ஐயப்பன் கோவில் தீர்ப்பு மறுசீராய்வு அவசியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2018 12:10
குன்னூர்:சபரிமலை ஐயப்பன் கோவில் தீர்ப்பு விவகாரம் தொடர்பாக, ஐயப்ப பக்தர்கள் சார்பில், குன்னூர் ஐயப்பன் கோவில் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள குருசாமிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அனைத்து பக்தர்கள் குழு உருவாக்கப்பட்டது.கூட்டத்தில், ஐயப்பன் கோவிலுக்கு வழங்கப் பட்டுள்ள தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி, நாளை காலை, 11:00 மணிக்கு குன்னூரில் ஊர்வலம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அனைத்து மக்களும் குடும்பத்தினருடன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.