பதிவு செய்த நாள்
06
அக்
2018
12:10
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த குருபெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். நவக்கிரகங்களில் ஒன்றான குரு, ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம், (அக்., 4ல்) துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு, குரு பெயர்ச்சி நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் (அக்., 4ல்) காலை முதல், கல்யாண பசுபதீஸ்வரர் கோவி லில், குரு பகவானுக்கு, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடந்தது. இரவு, 10:00 மணிக்கு, சுவாமிக்கு மஹா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* இதேபோல், லாலாப்பேட்டை செம்பொற்ஜோதீஸ்வரர் கோவிலில், குருப்பெயர்ச்சி விழா முன்னிட்டு தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள ராஜகணபதி விநாயகர்,செம்பொற்ஜோதீஸ்வரர், தர்மசம்வர்த்தமனி அம்மன் முதலான சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், லாலாப்பேட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.