திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2018 01:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் குரு பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம், பூஜை நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளிய தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நவக்கிரகங்களுடன் எழுந்தருளிய குருபகவானுக்கு யாகசாலை பூஜை முடிந்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமிக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டது.
பாண்டியன்நகர் கல்யாண விநாயகர் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூர்த் திக்கு யாகசாலை பூஜை நடந்தது. ஹார்விபட்டி, விளாச்சேரி, திருநகர் கோயில்களில் யாக சாலை பூஜை நடந்தது.
* அலங்காநல்லூர்: அழகர்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இங்குள்ள சஷ்டி மண்டபத்தில் கும்பகலசங்கள் வைக்கப் பட்டு யாக பூஜைகள் நடந்தன. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ஏகாதச ருத்ர பாராயணம் ஸ்கந்த ஹோமம் நடந்தது. உற்ஷவர் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.
பக்தர்கள் தங்கள் ராசிக்கு ஏற்ப பரிகார பூஜைகள் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடா சலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் செய்தனர்.