சாணார்பட்டி: சாணார்பட்டி, வி.மேட்டுப்பட்டியில் ராமானுஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. ராமானுஜரின் வாழக்கை வரலாறு குறித்த சொற்பொழிவு, பஜனை பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு அவரது புகழை எடுத்துரைக்கும் விதமாக மாதந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பேரவை தலைவர் ராமராஜ், செயலாளர்கள் கிருஷ்ண ராமானுஜம், எதிராஜன், நிர்வாகிகள் சுதர்சன், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கதிர்நரசிங்க பெருமாள் கோயில் நிர்வாகி ஆதிநரசிம்மன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.