பதிவு செய்த நாள்
07
அக்
2018
12:10
சென்னை:புஷ்கரம் விழாவையொட்டி, தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில், அக்., 11 மற்றும், 13 தேதிகளில், மாலை, 5:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 5:00 மணிக்கு, நெல்லை சென்றடையும்
நெல்லையில் இருந்து, அக்., 12 மற்றும், 17ம் தேதிகளில், மதியம், 2:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு, தாம்பரம் வந்தடையும்
நெல்லையில் இருந்து, அக்., 16ம் தேதி மாலை, 6:15 மணிக்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 5:00 மணிக்கு, தாம்பரம் வந்தடையும்
தாம்பரத்தில் இருந்து, அக்., 15ம் தேதி இரவு, 7:15 மணிக்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 6:00 மணிக்கு, நெல்லை சென்றடையும்
நெல்லையில் இருந்து, அக்., 14ம் தேதி மாலை, 6:15 மணிக்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 5:00 மணிக்கு, தாம்பரம் வந்தடையும்
நெல்லையில் இருந்து, அக்., 17ம் தேதி மாலை, 3:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு, தாம்பரம் வந்தடையும்
தாம்பரத்தில் இருந்து, அக்., 16ம் தேதி மாலை, 5:15 மணிக்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 5:00 மணிக்கு, நெல்லை சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு, இன்று முதல் துவங்குகிறது என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.