பழநி:பழநி முருகன் கோயில் நவராத்திரி விழா நாளை (அக்.9) காப்புகட்டுதலுடன் துவங்கி அக்.19 வரை நடக்கிறது.நவராத்திரி விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயில், திருஆவினன்குடி கோயிலில் நாளை (அக்.9) காலைகாப்பு கட்டப்படுகிறது. மலைக் கோயிலில் உச்சிக்கால பூஜையில் சண்முகர், வள்ளி, தெய்வானை, துவார பாலகர்களுக்கு காப்புக் கட்டப்படும்.
பெரிய நாயகியம்மன் கோயிலில் அக்.,9 முதல் 19 வரை தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறும். சூரன்வதம் அக்.19 விஜயதசமி அன்று சூரன்வதம் நடக்கிறது.
அன்று மலைக்கோயிலில் மாலை 5:30 மணி நடைபெறும் சாயரட்சை பூஜை முன்னதாக, மதியம் 1:30 மணிக்கு மலையிலிருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரிய நாயகியம்மன் கோயில் வந்தடையும். அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி கோதை மங்கலத்தில் வைத்து சூரனை வதம் செய்கிறார். நவராத்திரியை முன்னிட்டு, சின்னக் குமாரசுவாமி கொலுவில் இருப்பதால், மலைக்கோயில் தங்கரதப்புறப்பாடு அக்.10 முதல் 19 வரை நிறுத்தப்படுகிறது.