பதிவு செய்த நாள்
08
அக்
2018
12:10
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, கரிவரதராஜ பெருமாள் மற்றும் அம்மன் கோவில்களில், நவராத்திரி விழா, அக்.,9ல் துவங்கி 18 வரை நடக்கிறது.
நவராத்திரி விழாவை ஒட்டி, சவுடேஸ்வரி அம்மன், காமாட்சியம் மன், பிளேக் மாரியம்மன், கரிவரதராஜ பெருமாள் கோவில்களில், கொலு பொம்மைகள் வைத்து, தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தினமும் மாலை 6:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி, 18 வரை தினமும் மாலை, சிறப்பு வழிபாடு, பஜனைகள் நடக்கிறது.
பிளேக் மாரியம்மன் கோவில், நவராத்திரி விழாவில், முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாள் மகாலட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 10ம் நாள் விஜயதசமியன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.