பதிவு செய்த நாள்
08
அக்
2018
12:10
உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், நவராத்திரி கொலு சிறப்பு பூஜை நாளை (அக்., 9ல்) துவங்குகிறது.உடுமலை, முத்தையா பிள்ளை லே-அவுட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில், நவராத்திரி கொலு நாளை (அக்.,9ல்) துவங்குகிறது. தொடர்ந்து, 10ம் தேதி முதல், 19ம் தேதி வரை, துர்க்கை அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மாலையில் கொலுவிற்கு தினம் ஒரு அலங்காரம் நடக்கிறது. நவராத்திரி நாட்களில், 13ம் தேதி முதல் தொடர்ந்து, மாலை, 6:15 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பழனியாண்டவர் நகர் சித்தி விநாயகர் கோவிலில் நாளை துவங்கி, 17ம் தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.
குறிஞ்சேரி துர்க்கை அம்மன் கோவிலில், நவராத்திரி கொலு அக்.,10ம் தேதி துவங்கி, 18ம் தேதி நிறைவடைகிறது. நாள்தோறும், காலை, மற்றும் மாலையில் சிறப்பு பூஜை நடக்கிறது.