விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல 3வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மகாளய அமாவாசை தினமான இன்று (அக்., 8ல்) ஏராளமான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்கு சென்றனர். ஆனால் தொடர் மழை காரணமாக இன்றும் (அக்., 8ல்) பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப் படவில்லை.