பதிவு செய்த நாள்
08
அக்
2018
02:10
நாமக்கல்: ஷீரடி சாய்பாபா, 1918, அக்., 15ல், விஜயதசமி அன்று மகாசமாதி அடைந்தார். அன்று முதல், இன்று வரை, ஆண்டு தோறும், விஜயதசமி அன்று, ஷீரடி சாய் பாபாவின், புண்ணிய திதி அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, நாமக்கல் - திருச்சி சாலை, வரகுரம்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள, சாய் தத்தா பிருந்தாவன் பிரார்த்தனை ஸ்தலம் மற்றும் தியான மண்டபத்தில், வரும், 18ல், ஷீரடி சாய் பாபாவின் சதாப்தி விழா துவங்குகிறது.
காலை, 6:30 மணிக்கு, காக்கட் ஆரத்தி, 7:15 மணிக்கு, தரிசனம், 8:00 மணி முதல், 10:00 மணி வரை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஷோடச உபசாரம். மதியம், 12:00 மணிக்கு, ஆரத்தி, 1:00 மணிக்கு, தரிசனம், மாலை, 6:00 மணிக்கு, தூப் ஆரத்தி, இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு சாவடி உற்சவம், 8.:0 மணிக்கு, ஷேஜ் ஆரத்தி. மறுநாள் காலை, 8:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், விஷ்ணு சகஸ்ர நாமம், ஹனுமன் சாலீஸா பாராயணம், பகல், 2:00 மணிக்கு, ஆத்ம ஜோதி ஏற்றுதல், இரவு, 7:00 மணிக்கு, பரத நாட்டியம் மற்றும் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடு களை, சாய் ஹர்ஷா நான் பிராபிடபுள் டிரஸ்ட் நிர்வாகத்தினர், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.