பதிவு செய்த நாள்
09
அக்
2018
12:10
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கபட்டது. திருவாடானை அருகே, மாஞ்சூர் கிராமத்தில் பழங்கால சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கல்வெட்டுகளை ஆய்வு செய்த ராஜகுரு கூறியதாவது: கல்வெட்டு களில் இவ்வூர் அரும்பொற் கூற்றைத்தை சேர்ந்த மாஞ்சி லான்மான மாணிக்கநல்லூர் எனவும் இக்கோவில் சுவாமி பெயர் திருவர காளிஸ்வரமுடைய நாயனார் எனவும் குறிப்பிடப ட்டுள்ளது. மாஞ்சில் எனும் ஊர் பெயர் மாஞ்சூர் என மாறியுள்ளது.
மாஞ்சில் எனும் மூலிகை தாவரத்தின் பெயரால், இவ்வூர் அமைந்துள்ளது. சடைமுடி போன்று காணப்படும் இதன் வேரிலிருந்து, நறுமண தைலம் தயாரித்து முற்காலத்தில் பயன்படுத்தி யுள்ளனர். இரண்டு கல்வெட்டுகளில் முதலாம் மாறவர்மன் குலசேகரன் காலத்தையும், சடையவர்மன் சீவலன்னன், மாறவர்மன் விக்கிரமபாண்டியன் காலத்தையும் சேர்ந்தவை. அப்பிவெட்டி, விரால புரளி ஆகிய நிலத்தின் பெயர்களும், பொன் எட்டரை, கழஞ்செய், மஞ்சாடின் ஆகிய தங்கத்தின் நிறுத்தல் அளவுகளும் முந்திரிகை, முக்காணி, மாவரை ஆகிய நில அளவுகளும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.