பதிவு செய்த நாள்
09
அக்
2018
02:10
மயிலம்:திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் மகாளய அமாவாசை ஜோதி தரிசன விழா நடந்தது.அதனையொட்டி நேற்று (அக்.,8ல்) காலை 6:00 மணிக்கு சந்திரமவுலீஸ்வரர், வக்கிரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வக்கிரகாளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பகல் 12:00 மணிக்கு அமாவாசை ஜோதி காண்பித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், சந்திரமவுலீஸ்வரர், வக்கிரகாளி, குண்டலிமா முனிவர், வரதராஜபெருமாள், வள்ளி, தெய்வானை சுப்பரமணியர், வக்கிரசனி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது போன்று மயிலம் அடுத்த கொல்லியங்குணம் காளியம்மன் கோவில், நெடிமோழியனூர் அக்கரை காளியம்மன் கோவிலில் மகாளய அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.
* திருக்கோவிலூர்: மகா ளய அமாவாசையை முன் னிட்டு திருக் கோவிலூர் தென் பெண்ணை ஆற்றில் ஆங்காங்கே கூடிய ஆயிரக்கணக்கானோர் புரோகிதர்கள் வேதம் முழங்க முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட பகுதியின் கிராம பஞ்சாயத்துக்களில் தென் பெண்ணையாற்றில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
* மயிலம்:மயிலம் மலையடிவாரத்தில் உள்ள அக்னி குளத்தில் ஏராளமானோர் நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.