சேதுக்கரை:சேதுக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு பித்ருக் கடன், தர்ப்பணம், திதி உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்தனர். சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். சேதுக்கரை தமிழ்மாமுனிவர் அகத்தியர், விநாயகர் கோயிலின் முன்பு சிதறு தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
* திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்தனர்.
* சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் பாலாபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்தனர்.