பதிவு செய்த நாள்
09
அக்
2018
03:10
திருப்பூர்:தாமிரபரணி மஹா புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரை திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (அக்., 8ல்) நடந்தது.விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், தாமிரபரணி மஹா புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரை நேற்று (அக்.,8ல்) காலை, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து துவங்கியது. வி.எச்.பி,. மாநில செயலாளர் ராஜமாணிக்கம், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட செயலாளர் பழனிசாமி, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பா.ஜ., மாவட்ட தலைவர் சின்னசாமி, ஆன்மிக நண்பர்கள் குழு தலைவர் செல்வராஜ், உட்பட பலர் பங்கேற்றனர்.
அவிநாசியில் புறப்பட்ட ரதம், திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., பள்ளி, அண்ணா காலனி முருகன் கோவில், குமார் நகர் விநாயகர் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், நல்லூர் ஈஸ்வரன் கோவில், இடுவம்பாளையம் மாரியம்மன் கோவில், பல்லடம் பொன்காளியம்மன் கோவில் சென்று குண்டடத்தில் நிறைவடைந்தது.