ஊட்டி:ஊட்டி அருகே காந்தளில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கூட்டம் நடந்தது. தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன், பொருளாளர் மோகன் முன்னிலை வகித்தனர். இதில், சபரி மலை பாரம்பரியத்தை காக்கவும், அனைத்து வயது பெண்கள் செல்லலாம் என்ற நிலை மாற வேண்டும், என, வலியுறுத்தி, காந்தள் மூவுலகரசியம்மன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் ஒன்று கூடி கூட்டு பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து,சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு, கேரள அரசு மறு சீராய்வு மனு செய்து சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க வேண்டும், என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.