பதிவு செய்த நாள்
09
அக்
2018
03:10
உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை சுயம்பு மகா வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழாவை முன்னிட்டு அக்.10 (நாளை) முதல் அக்.19 வரை 10 வரை நடக்கவிருக்கிறது. இதில் மூலவர் வராகி அம்மனுக்கு காலை 9:00 மணி, மாலை 4:00 மணிக்கும் 21 வகையான அபிஷேகம், அபிஷேக ஆராதனைகள் நடக்க உள்ளது.
சரஸ்வதி, லெட்சுமி, பார்வதி, காளி, துர்க்கை, வராகி, வைஷ்ணவி, சாமுண்டீஸ்வரி, இந்திராணி, மகிஷாசுரமர்த்தினி ஆகிய அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சிதருவார். தசமியன்று நிறைவு நாளில் உற்ஸவமூர்த்தியின் வீதியுலா நடக்கும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் ஸ்ரீதர் மற்றும் கோயில் ஸ்தானிக பட்டர்கள் செய்து வருகின்றனர்.