சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு இடுக்கியில் 11 இடங்களில் மறியல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2018 01:10
மூணாறு: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 11 இடங்களில் மறியல் நடந்தது.மூணாறில் காங். கூட்டணியின் தேவிகுளம் சட்டசபை தொகுதி குழு தலைமையில் நேற்று மாலை நேர தர்ணா நடந்தது. தொகுதி குழு தலைவர் சைனுதீன் தலைமை வகித்தார். இந்திய முஸ்லிம் லீக் கேரள மாநில செயலாளர் சலீம் துவக்கி வைத்தார். காங்., முன்னாள் எம்.எல்.ஏ., மணி, ஐக்கிய ஜனநாயக கூட்டணி கன்வீனர் முனியாண்டி, காங்., இளைஞரணி அகில இந்திய துணைத் தலைவர் மாத்யூகுளநாடன், கேரளா காங்கிரஸ்(ம) தொகுதி தலைவர் சாபுபரகராகத் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கேரள அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.