Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 47. சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2018
02:10

தக்ஷப் பிரஜாபதி தட்சன் என்பவர் மிகப்பெரிய வேத சாஸ்திர விற்பன்னர். பலப்பல யாகங்களைச் - வேள்விகளை செய்து பல நன்மைகளை அடைந்திருக்கிறார். வேள்விப்பயன் களாலும், பிறவிப்புண்ணியப் பயன்களாலும், அன்னையை அண்டங்களை எல்லாம் படைத்தவளை தன் மகளாகப் பெற்ற பெரும் புண்ணியர் ஆவர். எனினும், வித்யாகர்வத்தால் தன் ஞானஅறிவு மழுங்க வினைப்பயனால் ஒருபெரும் யாகத்தினை நடத்தத்திட்டமிட்டார். மண் மற்றும் விண் வரை உள்ள சிறந்த வேதியர்களையும், முனிவர்களையும், அரசர்களையும், அழைத்து யாகத்தை தொடங்கினர். வேள்வியில் அளிக்கும் அவிர்பாகங்களை அக்னியின் மூலமாக இறைவனுக்குப் போய்ச் சேருவது நியதி! இதனை உணர்ந்திருந்தும், அவ்வாகுதிகளுக்கு உரியவரான சிவபெருமானை அழைக்காது அவமானப்படுத்தும் நோக்கம் கொண்டார். தன் மகள் தாஷாயினியை அவ்விறைவனே மணந்து கொண்ட பெருமைக்குரியவரான தன் மாமனை அழைக்கவில்லை. இதை உணர்ந்த அன்னை யாகசாலைக்குச் செல்ல திட்டமிட்டாள். அதற்கு இறைவன் அனுமதி கிடைக்காத போதும் மீறிச்சென்று தன் தந்தையை தட்டிக் கேட்டாள். ஆகுதிக்குரிய அரனை அழைக்க முடியாது எனக் கூறிவிட்டான் தட்சன்.

திருந்தாத தந்தைக்கு எதிராக அவ்வேள்வியை நிறுத்திச் சாபமிட்டதோடு, தன்னையும் அவ்வேள்வியில் மாய்த்துக் கொள்ள விரும்பிய போது, அம்மாலவன் அத்தருணம் தமக்கையை தன் சக்கிரத்தால் தாங்கி விசிறினார். அப்போது அன்னையின் உடல்பாகங்கள் பூமியில் பற்பல இடங்களில் சிதறி விழுந்தன. அவ்வாறு விழுந்த இடங்கள் பின்னர் சக்தி பீடங்களாகத் திகழ்ந்தன என்பர். அவ்விடங்களை 51 இடம் என்றும், இதர புராணங்களில் "தேவிபாகவதம் கந்த, மச்ச, பத்ம, புராணங்களில் 70 என்றும், 108 என்றும், கூறப்படுகின்றன. எனினும், இவ்வகிலம் ஒலியின் வடிவால் சமைக்கப்பட்டது. என்றும் அவ்ஒலிவடிவமாய் இருப்பவள் அன்னை பராசக்தி என்றும், அப்பராசக்தியின் அடிப்படை ஆதார ஒலிகள் எழுப்பும் 51 எழுத்தின் வடிவாகயிருப்பதால், அந்த 51 இடங்கள் சாலச்சிறந்த சக்திபீடங்கள் என சாஸ்திரம் கூறுகிறது.

அதன்படி இப்பரந்த பாரதத்தின் பரவிய தேசங்கள் இந்தியாவில் பாரதம் 42 இடங்களிலும், பாகிஸ்தானில் 1 இடத்திலும் பங்களாதேஷில் 4 இடத்திலும், நேப்பாளத்தில் 2 இடத்திலும், இலங்கை 1 இடத்திலும், திபெத் 1 இடத்திலும், வீழ்ந்ததால் அப்புண்ணியத்தைப் பெற்றன. இதில் மிகப்பெருமையும், அருளும் பெற்ற தலம் மதுரையம்பதியாகும். ஏனெனில் அன்னையின் இதயபாகம் மதுரை கிருதுமால் நதியின் அருகே வீழ்ந்து, இத்தென்னகத்திற்கு அருட்பெருமை சேர்த்தது.

 

ஊர்கள்        -               அம்மன்                –    இடம் - வழி

1. அஸ்ஸாம் கௌஹாத்தி    –    காமாக்கியா            –    கௌஹாத்தி காமகிரிமலை
2. ஆந்திரா கோடி தீர்த்தம்    –    விஷ்வேசி                  –    கோதாவரி ரயில் நிலையம்
3. ஸ்ரீசைலம்                  –    பிரம்மராம்பாள்            –    ஸ்ரீசைலம் மலை
4. திருச்சானூர்        –    பத்மாவதி                           –    திருப்பதி, அலர்மேலு, மங்காபுரம்
5. வாராங்கல்                 –    பத்ரகாளி            –    காசிபேட் அருகில்

உத்திரப் பிரதேசம் :
6. காசி                    –    விசாலாட்சி                –    காசி
7. சித்ரகூட்                     –    சிவானி                –    சாராமந்தீர் உள்ளே சித்ரகூட ரயில் நிலையம்.
8. நைமிசாரிண்யம்    –    லிங்கதாரிணி            –    சீதாபுர் ரயில் நிலையம்
9. பிரயாக்                      –    லலிதா தேவி            –    அசயவட் ரயில் நிலையம்
10. மதுரா                       –    சாமுண்டா            –    மதுரா ரயில்நிலையம்
11. ஒரிஸ்ஸா ஜெகந்நதாபுரி–    விமலாதேவி              –    ஜெகந்நாதர் ஆலயம் அருகில்
12. கர்நாடகம் மைசூர்    –    சாமுண்டீஸ்வரி            –    சாமுண்டி மலை
13. வனகுண்டி        –    "சந்திரமாம்பா கிருபாவதி        –    பீமா நதிக்கரையில் வாட் ரயில்   நிலையம் அருகில்

 
தமிழ்நாடு :
14. காஞ்சிபுரம்        –    காமரி  (காமாக்ஷி )        –    காஞ்சிபுரம்
15. கன்யாகுமரி        –    சர்வாண்                –    பத்திரகாளி கன்னியாகுமரி கோயில் உள்ளே தனியாக
16. மதுரை              –    மீனாட்சி                    –    மதுரை

மஹாராஷ்ட்ரம்:

17. கோலாப்பூர்              –    கரவீரபீடம்                –    கோலாப்பூர்
18. நாசிக்        –    பிராம்மரி            –    பத்ரகாளி கோயில் பஞ்சவடியிலிருந்து ஒருமைல் மாஹீர்
19. துளஜாப்பூர்        –    துளஜா பவானி                      –    துளஜாப்பூர் கிராமம் அருகில் பத்ரகாளி கோயில்
20. மாஹீர்தட்        –    ரேணுகா                –    நாந்தேக் மாவட்டம்

குஜராத் :
21. அம்பாஜி                  –    அம்பாஜி                    –    மவுண்ட்ஆபு
22. பாபா கட்         –    மஹாகாளி                 –    அம்மா மாதா கோயில் வளாகம், பரோடா.
23. பரோடா         –    ஹர்சித்தி                –    பரோடாவிலிருந்து 30 மைல்

ஹரியானா :
24. குருஷேத்திரம்    –    சாவித்திரி            –    திவைபாயனகுளம் அருகில்

ஜம்மூ-காஷ்மீர் :
25. கந்தர்வ ஸ்தானம்    –    ஷிரபவானி                –    ஸ்ரீநகருக்கு 1 ½ கி.மீ.வடக்கில்

26. ரூல்காவ் குல்கிராமம்     –    குலவாகீஸ்வரி            –    ஸ்ரீநகருக்கு 60 கி.மீ.அருகில்
27. வைஷ்ணவ தேவி    –    வைஷ்ணவி தேவி        –    ஜம்முவிற்கு 46 மைல் அருகில்
28. கணக்புர்                   –    சீதா                –     தர்ப்பங்காவிலிருந்து 38.5மைல்
29. பரலி                     –    ஜெயதுர்கா            –     வைத்யநாத கோயில் வளாகம்.
30. சாசாரம்            –    சோனா                       –    சாசாரம் ரயில் நிலையம், தாராசண அடிகோவில்
31. பாட்னா            –    சர்வாநந்தகிரி             –    பட்னீஸ்வரி தேவி கோயில்  வளாகம்.

மேற்கு வங்காளம் :
32. காளிகட்           –    காளி                   –    கல்கத்தா தட்ஷினேஸ்வர்
33. நளஹத்தி                 –    பஹீளா                –    காந்திநிகேதனிலிருந்து 75 கி.மீ.மலைஉச்சியில். நளஹத்தி ஜங்ஷனில் இருந்து 3.4 கி.மீ.         

34. பிரம்ம கிராமம்         –    பஹீளா                      –    கத்வா ஜங்ஷன் 144 கி.மீ. ஹவுராவில் இருந்து.

மேகாலாயா:
35. ஷில்லாங்                 –    ஜயந்தி                –    வவூர்பாக் மலை உச்சியில்

ராஜஸ்தான்:                          
36. புஸ்கத்        –    காயத்திரி            –    அஜ்மீர் அருகில்
37. பைராட்        –    அம்பிகா                     –    ஜெயப்பூர் வடக்கில் 64 கி.மீ.

ஹிமாச்சலம் :
38. ஜீவாலா முகி        –    சித்திதா                –    ஜீவாலாமுகி கோயில் உள்ளே ரோடு ஜீவாலாமுகி ரயில்நிலையம்21 கி.மீ.
39. ஹிமாச்சலம்        –    நயினாதேவி            –    பக்ராநங்கல் அணையில் இருந்து20 கி.மீ.

திரிபுரா:          
40. ராதாகிருஷ்ணாபூர்    –    திருபுரசுந்தரி            –    ராதாகிருஷ்ணபூருக்கு தென்கிழக்கில் 2.5 கி.மீ.

மத்திய பிரதேசம்:
41. உஜ்ஜியினி        –    ஹரசித்தி தேவி            –    உஜ்ஜயினி நகர்
42. விந்திய மலை        –    விந்தியாவாஸினி            –    மலை உச்சியில்
43. ஹிங்லாட்ஜ்          –    பைரவி                –    ஹிங்லால்நதிக்கரை குகையில் கராச்சிக்கு வடமேற்கு 144 கி.மீ.

பங்களாதேஷ்:
44. ஷிகார்புர் கிராமம்    –    ""சுனந்தா உக்ரதாரா        –    பாரிஸதால் ரயில்நிலையத்தில் இருந்து வடக்கே 21 கி.மீ.
45. பவானிபர்                –    அபர்னா                –    போக்டா ரயில்நிலையத்தில் இருந்து தென்மேற்கில் 32 கி.மீ
46. சீதாகுண்ட்               –    பவானி                       –    சந்திரசேகரகிரி எனும் மலையில் "சட்காவ்வில் இருந்து 38 கி.மீ.
47. ஜேஸோர்           –    யசோரேஸ்வரி            –    குல்னா மாவட்டம்
 
நேபாளம்:
48. காட்மண்ட்              –    குஹ்யேஸ்வரி                   –    பசுபதிநாதர் கோயிலருகில்    வாக்மதி நதிக்கரையில்
49. காட்மண்ட்        –    கண்டஹிதேவி            –    கண்டகிருதி உற்பத்தி ஸ்தானம்
50. இலங்கை         –    இந்திராணி            –    ராஜேஸ்வரர் கோலிவில் வளாகம்

திபெத்:
51. கைலாஷ்          –    தாட்சாயனி                –    மானஸரோவர் கரையில்

சக்தி பீடங்கள் 64 எனக் கூறுவதால், அதன்படி இங்கே கீழ்கண்டவாறு சக்தியின் பெயரும், அதற்குரிய பீடங்களின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன.

1.காஞ்சிபுரம்        –    காமகோடிபீடம்
2.காசி            –    மணிகர்ணிகாபீடம்
3.மதுரை            –    மந்திரிணி பீடம்
4.திருஆனைக்கா        –    தண்டினி பீடம்
5.இராமேஸ்வரம்        –    சேது பீடம்
6.மஹா காளம்        –    மஹோத் பலாபீடம்
7.மைசூர்            –    சம்பப் பிரதபீடம்
8.சோமநாதம்        –    பிரபாஸபீடம்
9.நந்திபுரம்        –    கல்யாணி பீடம்
10.நாகுளம்        –    ஒட்டியாண பீடம்
11.காளகஸ்தி        –    ஞான பீடம்
12.விந்தயாசலம்        –    விந்தியா பீடம்
13.பாபநாசம்        –    விமலை பீடம்
14.திருவாரூர்        –    கமலை பீடம்
15.மணித்த்வீபம்        –    வித்யா பீடம்
16.காமரூபம்        –    காமகிரி பீடம்
17.புஷ்கரம்        –    காயத்திரி பீடம்
18.கன்யாகுமரி        –    குமரி பீடம்
19.திருவையாறு        –    தர்ம பீடம்
20.ஜாலந்திரம்        –    ஜாலந்திர பீடம்
21.த்ரயம்பகம்        –    த்ரிகோண பீடம்
22.திருவண்ணாமலை    –    அருணை பீடம்
23.திருக்கடவூர்        –    கால பீடம்
24.திருக்குற்றாலம்        –    பராசக்தி பீடம்
25.கும்பகோணம்        –    விஷ்ணுசக்தி பீடம்
26.திராட்ஷாரமா        –    மாணிக்க பீடம்
27.உஜ்ஜயினி        –    ருத்ராணி பீடம்
28.கயை            –    திரிவேணி பீடம்
29.ஸ்ரீநகர்        –    ஜ்வாலாமுகி பீடம்
30.சிருங்கேரி        –    சாரதா பீடம்
31.துளஜாபுரம்        –    ஊத்பலா பீடம்
32.கோலாப்பபூர்        –    கரவீர பீடம்
33.தேவிபட்டணம்    –    வீரசக்தி பீடம்
34.ருத்ர கோடி        –    ருத்ரசக்தி பீடம்
35.பூரி            –    பைரவி பீடம்
36.திருவெண்காடு        –    ப்ரணவ பீடம்
37.ஸ்ரீ சைலம்        –    சைல பீடம்
38.பிருந்தாவனம்        –    முக்தி பீடம்
39.ஹஸ்தினாபுரம்        –    ஜெயந்தி பீடம்
40.கொல்லூர்        –    அர்த்தநாரி பீடம்
41.நீலபர்வதம்        –    ஸ்யாமளா பீடம்
42.வைதரணி        –    விரஜா பீடம்
43.குருஷேத்திரம்        –    உபதேச பீடம்
44.மானஸரோவர்        –    தியாக பீடம்
45.கோகர்ணம்        –    கர்ண பீடம்
46.கல்கத்தா        –    உக்ரசக்தி பீடம்
47.திருநெல்வேலி        –    காந்தி பீடம்
48.ஈங்கோய் மலை    –    ச்சாயா பீடம்
49.பிரயாகை        –    பிரயாக பீடம்
50.திருவெற்றியூர்        –    இட்சு பீடம்
51.அம்பத்தூர்        –    வைஷ்ணவி பீடம்
52.மாத்ரு புரம்        –    மாத்ரு பீடம்
53.கணகல்        –    உக்ர பீடம்
54.அம்ராத்கேஸ்வரம்    –    ஆம்ராத் பீடம்
55.ஸ்ரீ பர்பதம்        –    பர்வத பீடம்
56.பிரபாசம்        –    பிரபா பீடம்
57.நைமிணய சாதண்யம்    –    ஆரண்ய பீடம்
58.வேதராண்யம்        –    வசுலாபீடம்
59.அமரேசம்        –    அமர பீடம்
60.கட்சிநகர்        –    தேஜோ பீடம்
61.விந்திய மலை        –    மஹாநந்த பீடம்
62.ஸ்கூலகேஸ்வரம்    –    ஸ்தூல பீடம்
63.ஆஷாடம்        –    ஈதி பீடம்
64.சிதம்பரம்        –    சிற்றம்பலம்

சிவசக்தி பீடங்கள் பிரபஞ்சத்தில், பிரபஞ்ச ரூபமாகவே இருப்பதால் எங்கும் நிற்கும் எல்லாம்வல்ல இறைசக்தி எங்கும் பரவி இருக்கிறதே! யாதிலும் ஓதியுணர் அவர் உருவேயல்லாது அணுவை எண்ண முடியாது எனப்போல் நாம் எண்ணிக்கையில் திருத்தலங்களை எண்ணவா கூடும்? எண்ணத்தில் அவர்களை இருத்திப்பார்க்கின்ற போது நாமே அவர்களாகி விடுகிறோம் அல்லவா! ""அங்கிங்கெனாதபடி நிறைந்த சக்தியினுள் நுட்பமாய் நுழைந்தறிவோம்,

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar