Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 49. பதஞ்சலி மகரிஷி அருளிச் செய்த ஸ்தோத்ரம்
பதஞ்சலி மகரிஷி அருளிச் மீனாஷி சுந்தரேஸ்வரர் ஸ்தோத்ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2018
03:10

மீனாஷி சுந்தரேஸ்வரர் ஸ்தோத்ரம்

 பல மஹரிஷிகளும் முனிவர்களும் மகான்களும் தோன்றி சிறப்புற்று பெருமை பெற்ற நாடு நம் பாரத பூமி. புண்ணிய பூமியின் ரிஷிகள் நம் நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலகிற்கே வழி காட்டியாக வாழ்ந்தனர். மக்கள் உய்வதற்காக பல சன்மார்க்கங்களை காட்டியவர்கள். அவ்வாறு சன்மார்க்கத்தைக் காட்டியவர்களுள் ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியும் மிகச் சிறந்த ஒருவராவார். ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி மதுரையில் பழங்காநத்தத்தில் பல வருடங்கள் தவம் செய்து மேன்மை அடைந்தவர். ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி யோகத்தின் கர்த்தாவாக அஷ்டாங்க யோகத்தை உலகிற்கு ஈந்தவர். அவரால் இயற்றப்பட்ட ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வருடைய ஸ்தோத்திரம் பொருளுடன் பின் வருமாறு :-

‘ஸீவர்ண பத்மினி தடாந்ததிவ்ய ஹர்ம்ய வாஸினே
ஸøபர்ண வாஹனப்ரியாய ஸீர்ய கோடி தேஜஸே
அபர்ணயா விஹாரிணே பணாதரேந்த்ரதாரிணே
ஸதா நமச்சிவாய தே ஸதாஸிவாய சம்பவே”

பொற்றாமரை குளத்தின் கரையில் உள்ள மிகச் சிறந்த கோயிலில் மதுரை ஸ்ரீ மீனாக்ஷியம்மன் கோவில் வசிப்பவரும் கருடனை வாகனமாகக் கொண்ட எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அன்புக்குப் பாத்திரமானவரும், கோடி சூர்யர்களுடைய தேஜஸ்சை உடையவரும் ஸ்ரீ மீனாக்ஷியுடன் விளையாடுகிறவரும், நாகத்தைத் தலையில் அணிந்தவரும், மங்களமானவரும் எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும் ஆகிய மங்களமூர்த்தியுமான தங்களுக்கு நமசிவாயம் எப்பொழுதும் நமஸ்காரம்.

‘ஸீதுங்க பங்க ஜன் ஹூ ஜா ஸீதாம்ஸீ கண்ட மொளளயே,
பதங்க பங்க ஜாஸீ ஹ்ருத் க்ரு பீட யோனி சக்ஷிஷே,
புஜங்க ராஜா குண்டாலய, புண்ய சாலி பந்தவே,
ஸதா நமச்சிவாய தே ஸதா ஸிவாய சம்பவே.”

தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கையையும். பிறை சந்திரனையும் தலையில் தரித்துக் கொண்டவரும், சூரியன், சந்திரன் அக்னி நெற்றிக்கண் முதலியவைகளைக் கண்களாக உடையவரும், ஸர்ப்பத்தைக் குண்டலங்களாக சூடியவரும், புண்யம் செய்தவர்களின் பந்துவாக இருப்பவரும், மங்களத்திற்கு இருப்பிடமாக இருப்பவரும் எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவருமான மங்கள மூர்த்திக்கு எங்களது நமஸ்காரம்.

சதுர் முகான னாரவிந்த வேத கீத மூர்த்தயே
சதுர் புஜனு ஜா சரீர சோபமான மூர்த்தயே ந
சதுர் விதார்த்த தான சௌண்ட தாண்டவ ஸ்வரூபினே,
ஸதா நமச்சிவாய தே ஸதாசிவாய சம்பவே நந

நான் முகனாகிய பிரம்ம தேவனின் தாமரை போன்ற முகங்களில் உள்ள நான்கு வேதங்களினால் துதிக்கப்பட்ட ஸ்வரூபத்தை உடையவரும், மஹாவிஷ்ணுவின் சகோதரியான பார்வதியால் அலங்கரிக்கப்பட்ட அர்த்த நாரீஸ்வரரும், நாலாவிதமான தர்ம, காம, மோக்ஷங்களைக் கொடுப்பவரும், மிகத் திறமை வாய்ந்த தாண்டவ மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.

ஸரந்தி ஸாகர ப்ரகா ஸமந்த ஹாஸ மஞ்ஜூளா
தரப்வால பாஸமான வக்த்ர மண்டல ஸ்ரியே ந
கரஸ் புரத் கபால முக்த விஷ்ணு ரக்த பாயினே
ஸதா நமசிவாய தே ஸதாசிவாய சம்பவே நந

இலையுதிர் காலத்தில் பிரகாசிக்கும் சந்திரனைப் போன்று அழகான பவழம் போன்று கீழ் உதட்டோடு ப்ரகாசிக்கின்ற முகமண்டலத்தின் சோபையை உடையவரும், கையில் பிரகாசிக்கிற கபாலத்தில் விஷ்ணுவின் ரத்தத்தைக் குடிப்பவரும் மங்களத்திற்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்கள மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.

ஸஹஸ்ர புண்டரீக பூஜனைகஸீன்ய தர்ஸனா
ஸஹஸ்வ நேத்ர கல்பிதார்ச நாச் யுதாய பக்தித : ந
ஸஹஸ்ர பானு மண்டல ப்ரகாஸ சக்ரதாயினே
ஸதாநம : சிவாய தே ஸதாஸிவாய சம்பவே” நந

தாமரைப் பூவினால் சிவனுக்கு ஸகஸ்ரநாம அர்ச்சனை செய்யும் பொழுது ஒரு புஷ்பம் குறைந்ததனால் பக்தியுடன் தன் தாமரை போன்ற கண்ணை அர்ச்சனை செய்த மகாவிஷ்ணுக்கு ஆயிரம் சூர்ய மண்டலம் போல் ப்ரகாசிக்கின்ற சக்ரத்தைக் கொடுத்தவரும், மங்களத்துக்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்கள மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.

ரஸாரதாய ரம்ய பத்ரப் ருத்ர தாங்க பாணயே
ரஸாத ரேந்த்ர சாபஸிஞ்சி நீ க்ருதா நிலாஸினே ந
ஸ்வஸார தீ க்ருதா ஜ னுன்ன வேத ரூப வாஜினே
ஸதா நம; ஸிவாய தே ஸதா ஸிவாய ஸம்பவே நநசி

பூமியை தேராகவும் மஹாவிஷ்ணுவை அழகான அம்பாகவும் மேருமலையை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், ப்ரஹம் தேவனை ஸக்ஷ்ரதியாகவும், நான்கு வேதங்களை தேர் குதிரையாக உடையவரும், மங்களத்திற்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்கள் மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.

அதிப்ரகல்ப வீரபத்ர ஸிம்ஹநாத கர்ஜித
ஸ்ரு திப்ர பீத தக்ஷயாக போகி நாக ஸத் மனாம் ந
கதிப்ர தாய கர்ஜிதாகிலப் ப்ரபஞ்ச ஸாக்ஷீணே
ஸதா நம: ஸிவாய தே ஸதா ஸிவாய ஸம்பவே நந

தக்ஷயாகத்திற்கு வந்திருந்த பாதாளவாசிகள், ஸ்வர்கவாசிகள், மிக பெரிய சரீரத்தையுடைய வீரபத்ருடைய சிங்கத்திற்கு ஒப்பான கர்ஜனையைக் கேட்டு பயந்தனர். பயந்தவர்களுக்கு அபயம் / உயிரை அளித்தவரும், அப்பொழுது சப்தித்த ஸர்வப்ரபஞ்சங்களுக்கும் ஸாக்ஷியாய் இருந்தவருமான மங்கள மூர்த்திக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.

ம்ரு கண்டு ஸீனு ரக்ஷணாவதூத தண்ட பாணயே
ஸýகண்ட மண்டலப்புரத் ப்ரபாஜிதாம் ருதாம்ஸீவே ந
அகண்ட யோகஸம் பதர்த்தி லோக பாவிதாத்மனே
ஸதாநம; ஸிவாய தே ஸதாவிவாய சம்பவே நந

மார்க்கண்டேயரைக் காப்பதற்காக யமனை வெறுத்தவரும், சந்திரனே தோல்வியுறும்படி, அழகிய காந்தியுக்த, பிரகாசிக்கின்ற கன்னங்களை உடையவரும், வேண்டுபவர்களுக்கு இகபர சௌபாக்கியம் தருகிறவரும், மங்களத்திற்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்கள மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.

மதுரி புவிதி ஸக்ர முக்ய தேவைரபி
நியமார்ச்சித் பாத பங்க ஜாய ந
கன க கிரிஸராஸராஸ னாய துப்யம்
ரஜதஸ பாபதயே நம: ஸிவாய நந

மஹாவிஷ்ணு, ப்ரம்மா, இந்திரன் முதலிய தேவர்களால் நியமனத்துடன் பூஜிக்கப்பட்ட பாதகமலங்களை உடையவரும், மேரு பர்வதத்தை வில்லாக உடையவரும் வெள்ளியம்பலத்திற்கு அதிபதியாகிய நமச்சிவாயத்திற்கு எப்பொழுதும் நமஸ்காரம்.

ஹாலாலஸ்ய நாதாய ஹாலா ஹலாலங்க்ருத சுந்தராய ந
மீனேக்ஷணயா பதயே ஸிவாய நமோ: ஸீந்தர தாண்டவாய நந

ஹாலாஸ்ய கேஷத்திரத்திற்கு மதுரை நாதனும், மஹேச்வரம், ஹாலாஹலம் என்று கால கூட விஷத்தினால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடைவரும், ஸ்ரீ மீனாக்ஷியின் பதியும் அழகிய தாண்டவத்தை உடைய மங்கள மூர்த்திக்கு எங்களின் நமஸ்காரம்.

த்வயா க்ருதமிதம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்தி ஸம்யுத ந
தஸ்யாயுர்தீர்க்க மாரோக்யம் ஸம் பதஸ்ச ததாம்யஹம் நந

உன்னால் ஸ்ரீ பதஞ்சலி இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை எவன் பக்தியுடன் படிக்கிறானோ அவனுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் ஸம்பத்து இவைகளை நான் சிவபெருமான் கொடுக்கிறேன்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar