நெட்டப்பாக்கம்: மடுகரை வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.மடுகரை கிராமத்தில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில், நான்காம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி, மாலை 6.00 மணிக்கு பூணுால் மாற்றுதல், பெண் அழைப்புடன் சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.இரவு, 7.00 மணிக்கு வெங்கடேச பெருமளுக்கும், அலமேல்மங்கை தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், மடுகரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.