சின்னாளபட்டி:புரட்டாசி நான்காவது சனிவாரத்தை முன்னிட்டு அம்பாத்துரை ரோடு ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு திரவிய அபிேஷகத்துடன், வெண்ணெய் காப்பு, விசேஷ துளசி மாலை அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், புரட்டாசி சனிவார சிறப்பு பூஜை நடந்தது.
வேடசந்துார்: வேடசந்துார் அகோபில நரசிங்க பெருமாள் கோயிலில் அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. வேடசந்துார் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். குஜிலியம்பாறை அருகே உள்ள ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோயிலில் சனி வாரத்தை முன்னிட்டு, நரசிங்கப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளுக்குசிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.