பதிவு செய்த நாள்
15
அக்
2018
01:10
ஈரோடு: மதமாற்றம் செய்பவர்களின் கைக்கூலியாக, அறநிலையத்துறை செயல்படுகிறது என்று, ஈரோடு மாநகர் மாவட்ட இந்து முன்னணி குற்றஞ்சாட்டி உள்ளது. ஈரோடு மாநகர்,
மாவட்ட, இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று (அக்., 14ல்) நடந்தது. மாநில துணை தலைவர் பூசப்பன் தலைமை வகித்தார்.
மாநில செயலாளர் கிஷோர் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிலை திருட்டு, உண்டியல் கொள்ளை, கட்டண மோசடிகளின் பின்னணியில், நாத்திக கும்பல் உள்ளதாக
தெரிகிறது. பெருந்துறை, சென்னிவலசு பகுதி மாகாளி அம்மன் கோவில், திண்டல் புதுக்காலனி மாரியம்மன் கோவில்களை பூட்ட, அறநிலையத்துறையே சாதகமாக உள்ளது. மதமாற்றம் செய்பவர்களின் கைக்கூலிகளாக அறநிலையத்துறை செயல்படுகிறது. பூட்டிய கோவில்களை, அறநிலையத்துறை உடனே திறக்க வேண்டும்.கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் என்று ஆண்டாண்டு காலமாக இருந்த பெயரை கோவில் செயல் அலுவலர் முத்துசாமி மாற்றி உள்ளார். மேலும், பல்வேறு பரிகார பூஜைகள், இக்கோவிலில் ஆன்மிக நெறிமுறைக்கு மாறாக செய்யப்படுகிறது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில், பக்தர்கள் நீராட, தீர்த்தம் எடுக்க படித்துறை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.