திருநெல்வேலி:நெல்லை அருகே தருவை உய்யக்கொண்ட அம்மன் கோயில் கொடை விழா நடந்தது.தருவையில் உய்யக்கொண்ட அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கொடை விழாவில் மண் உருவப்பொம்மைகளை கோயிலுக்கு நேர்த்திக்கடனாக மக்கள் செலுத்தி வழிபடுவர். சுற்றுப்பகுதியில் வேறு எங்கும் இல்லாத அளவில் இக்கோயிலுக்கு அதிக பொம்மைகள் நேர்த்திக்கடன் செலுத்தப்படும்.இந்த ஆண்டு கோயில் கொடை விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று ஏராளமானோர் கண்கவர் வண்ண உருவப்பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். அம்மனுக்கு உச்சிக்கால பூஜை, அக்கினிச்சட்டி ஊர்வலம், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இரவு அம்மன் சப்பரபவனி நடந்தது.கொடை விழா இன்று நிறைவு பெறுகிறது.