Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மபுரி சாய்பாபா கோவிலில் ஷீரடி ... மொரட்டாண்டி கோவில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஷீரடி சாய்பாபா நுாற்றாண்டு மகா சமாதி தின விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2018
03:10

சென்னை: மயிலாப்பூர், ஷீரடி சாய் பாபா கோவிலில், பாபாவின் நுாற்றாண்டு சமாதி தின விழாவை முன்னிட்டு, ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் குளத்தின் அருகில் அமைந்துள்ளது, ஷீரடி சாய் பாபா கோவில். இது, சென்னையை தாண்டிய சரித்திர பின்னணி கொண்டது.அக்காலத்தில், ஷீரடி சாய் பாபா குறித்து, சென்னைவாசிகள் அதிகம் தெரிந்திருக்கவில்லை. அவரது தீவிர பக்தரான,நரசிம்ம சுவாமி என்ற வக்கீல், மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரத்தில் குடியிருந்தார்.

அவர் தன் வீட்டின் அருகில் இருந்த மரத்தின் கீழ், ஷீரடி சாய்பாபா படத்தை வைத்து, தினமும் பூஜை செய்து வணங்கிவந்தார்.பின், பன்னலால் என்ற வியாபாரி உதவியுடன், 1942ல் ஷீரடியில் இருந்து அளிக்கப்பட்ட பாபாவின் விக்ரகத்தை, பிரதிஷ்டை செய்தார்.இதுவே, தென் இந்தியாவின் முதல் சாய்பாபா கோவிலானது.மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலில், ஸ்ரீ சத்ய சாய் பாபாவின், 100 மகா சமாதி கொண்டாட்டம் மற்றும் நரசிம்ம சுவாமிஜியின், 62ம் ஆண்டு ஆராதனை விழா ஆகியவை, 8ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடத்தப்படுகிறது.இந்த விழாவை முன்னிட்டு, செப்., 27 முதல், வரும், 26ம் தேதி வரை, முன்னணி கலைஞர்களின் கர்நாடக சங்கீதம், பக்தி பாடல்கள், வாத்திய இசை, பஜனை, ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்படுகின்றன.விழாவின், முக்கிய நிகழ்வான பாபா மகாசமாதி தினத்தை முன்னிட்டு, நேற்று காலை, 6:05 மணிக்கு, பாபாவிற்கு பால்அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து, சாய் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. பின், மதிய, துாப ஆரத்திகள் நடந்தன. இரவு பல்லக்கு உற்சவம் நடந்தது.சிறப்பு நிகழ்வாக, நேற்று சாய் பக்தர்கள் மூலம், ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், நேற்று பிறந்த, 100 குழந்தைகளுக்கு, சாய் பாபா உருவம் பொறித்த தங்க டாலர் வழங்கப்பட்டது.விஜயதசமியான இன்று அதிகாலை, 5:05 மணிக்கு, காகட ஆரத்தி நடக்கிறது.பின், ருத்ர அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. காலை, 9:00 மணி முதல், 12:00 மணி வரை, தி.நகர், சிவா பாகவதர் குழுவினரின், சாய் பஜன் நிகழ்ச்சி நடக்கிறது.மதிய ஆரத்திக்கு பின், மவுளி மொகைதீன் சாஹுல் ஹமீது வழங்கும், திருக்குரான் ஓதுதல் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு, 7:30 மணிக்கு, பாபா மூர்த்தி, நரசிம்ம சுவாமி படங்களுடன், மயிலாப்பூர் நான்கு மாட வீதி உலா நடக்கிறது.இன்று சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில், அன்னதான மும் வழங்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, லுங்கி, துண்டு, போர்வை, உணவு ஆகியவை, 22ம் தேதி வழங்கப்படுகிறது.நரசிம்ம சுவாமியின் ஆராதனை விழா மற்றும் நிறுவனர் தின கூட்ட தினமான, 24ம் தேதி, புடவை, வேட்டி, தையல் இயந்திரங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளன.இதற்கான ஏற்பாடுகளை, அகில இந்திய சாய் சமாஜத்தின் தலைவர், தங்கராஜ், செயலர், செல்வராஜ், பொருளாளர், உமா சங்கர் பாபு உள்ளிட்ட உறுப்பினர்கள், சாய்பக்தர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar