தர்மபுரி சாய்பாபா கோவிலில் ஷீரடி சாய்பாபா முக்தி தினம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2018 03:10
தர்மபுரி: ஷீரடி சாய்பாபாவின், 100ம் ஆண்டு முக்தி தினத்தையொட்டி, தர்மபுரி சாய் நகர் பூபதி தோட்டத்தில், சாய்பாபா கோவிலில் இன்று தீர்த்த அபி?ஷகம் நடக்கிறது. இதையொட்டி, காலை, 9:00 மணிக்கு, பாபநாசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தாமிரபரணி புனித நீரில், தீர்த்த அபி?ஷகம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, 10:00 மணிக்கு, சாய்பாபா திருவீதி உலாவும், 12:00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.