ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பழமையான ராமர் பாதம் கோயில் அடித்தளம் அரிக்கப்பட்டு இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. சீதையை ராவணன் சிறை பிடித்து சென்றதும், அவரை மீட்க தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீ ராமர், அனுமான், வானரசேனைகள் பாலம் அமைத்தனர். இக்கட்டுமான பணியை, ராமபிரான் ராமேஸ்வரத்தில் கெந்தமாதன பர்வதம் (உயரமான மணல் திட்டில்) என்னுமிடத்தில் நின்று ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் ராமர்பாதம் கோயில் உள்ளது. தரைமட்டத்தில் இருந்து 120 அடி உயரமுள்ள இக்கோயிலில் உள்ள ராமர் பாதத்தை ஏராளமான பக்தர்கள் வணங்கி செல்கின்றனர். இங்கு நின்று ராமேஸ்வரம் தீவு முழுவதையும் காணமுடியும். இந்நிலையில் கோயில் அடித்தளத்தில் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு கல்கள் கீழே விழுந்துள்ளதால், கோயில் இடியும் அபாயம் உள்ளது. கோயிலை சீரமைக்க இந்து சமய அறநிலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.