பதிவு செய்த நாள்
20
அக்
2018
01:10
திருப்பூர்: பொங்கலூர் அருகே டிச., மாதம் நடக்கவுள்ள சோடஷ மகாலட்சுமி சிறப்பு மகாயாக பூஜை நிகழ்வுக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. கோவை கோட்ட இந்து முன்னணி சார்பில், பொங்கலூர் அருகே, மூன்று நாள் சிறப்பு யாக பூஜை நடக்கவுள்ளது. வரும் டிச., 23 ம் தேதி 108 குதிரை கொண்ட அஸ்வ பூைஜ, கஜ பூஜையும், 24ம் தேதி, 1,008 கோமாதா பூஜை நடக்கிறது.
சோடஷ மகாலட்சுமி யாகம் அன்று காலை துவங்கி அடுத்த நாள் வரை தொடர்ந்து நடை பெறும். மூன்றாம் நாள் 25ம் தேதி இந்த யாகத்தை தொடர்ந்து, ஒரு லட்சம் குடும்பங்கள் பங்கு பெறும், மகாலட்சுமி குடும்ப பூஜை நடைபெறும். 25ம் தேதி நிகழ்வில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆன்மிக பெரியோர்கள், கொங்கு மண்டல ஆதீனங்கள் பங்கேற்க உள்ளதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், கோட்ட செயலாளர் செந்தில்குமார் தெரிவித்தனர். இந்த மூன்று நாள் நிகழ்வுகளுக்கான பந்தல், யாக சாலைகள், யாக குண்டம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று அக்., 19ல் நடந்தது. பொங்கலூர், பயனீர் தில்லை நகரில் நடந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.