கூடலூர்: இடுக்கி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தை களில் கல்விக்காக யக்கிரீவர் ஹோமம் நடந்தது. விஜயதசமி நாளான நேற்று (அக்., 19ல்) குமுளி அருகே அணைக்கரை சரஸ்வதி கோயிலில் அட்சரப்பியாசம் என்னும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளுக்காக ஹயக்கிரீவர் ஹோமம் நடத்தப்பட்டது. பல்வேறு பகுதியில் இருந்து பெற்றோர் குழந்தைகளை அழைத்து வந்தனர்.
அரிசி பரப்பிய தட்டில் முதன்முதலாக குழந்தைகளை கையில் பிடித்து அட்சர மந்திரத்தை எழுதினர். தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. இந்நிகழ்ச்சி வண்டிப்பெரியார் தர்மசாஸ்தா கோயில், தேக்கடி தேவி கோயில், குமுளி கணபதி பத்திரகாளிம்மன் கோயில்களில் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.