ஷீர்டி: மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீர்டி சாய்பாபா கோவிலுக்கு 36 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2010-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2011-ம் ஆண்டிற்கான வருமானம் 20 சதவீதம் கூடுதலாகும் எனவும், கடந்தாண்டு 401 கோடி ரூபாய் மதிப்புள்ள 36கிலோ தங்கம், 440 கிலோ வெள்ளி பொருட்கள் நன்கொடையாக பெறப் பட்டுள்ளது. கடந்த 2010-ல் 31 கிலோ தங்கமும், 320 கிலோ வெள்ளியும், வெளிநாட்டு பண மதிப்பாக சுமார் 6.28 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது என சாய்பாபா டிரஸ்டின் சிறப்பு அதிகாரி கிஷோர் மோர் தெரிவித்தார்.