பதிவு செய்த நாள்
09
பிப்
2012
11:02
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உண்டியல் எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. சேலம் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் வரதராஜன், சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷ்னர் பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் தமிழரசு, சூப்பிரண்ட் உமாதேவி, வன்னியர் திலகம், மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் சுகவனேஸ்வரர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. உண்டியல் காணிக்கைகள், பெட்டிகளில் எண்ணும் இடத்திற்கு எடுத்து வரப்பட்ட. தொடர்ந்து பணம், சில்லரை, தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனியாக பிரித்து எண்ணப்பட்டது. கோவில் ஊழியர்களுடன், இந்திய வங்கி ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் சார்பில், 4.28 லட்சம் ரூபாய், தங்கம் 18 கிராம், வெள்ளி 39 கிராம் ஆகியன காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இது குறித்து கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
சுகவனேஸ்வரர் கோவில் உண்டியல் வருவாய், 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மே மாதம் கடைசி வாரத்தில், வைகாசி தேரோட்ட உற்சவம் துவங்க உள்ளதால், அடுத்த முறை உண்டியல் திறக்கப்படும் போது, உண்டியல் மூலம் கோவிலுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.