பதிவு செய்த நாள்
23
அக்
2018
12:10
மல்லசமுத்திரம்: மாந்தோப்புகாலனி சக்தி மாரியம்மன் கோவிலில், வரும், 28ல் கும்பா பிஷேகம் நடக்கிறது. மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் அடுத்த, மாந்தோப்பு காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன், பாலமுருகன், மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், பிரம்மா, மகேஸ்வரி, வைஷ்ணவி ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 27 காலை, 7:00 முதல், இரவு, 8:00 மணி வரை, தீர்த்தம் எடுத்து வர காவிரிக்கு செல்லுதல், விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், பஞ்ச கவ்ய பூஜை; மறுநாள் காலை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், பூர்ணாஹூதி, கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.