வடமதுரை: வடமதுரையில் வட்டார ஐயப்ப சேவா சங்கம், ஐயப்ப பக்தர்கள் சேவை அறக்கட்டளை, இந்து மக்கள் கட்சி இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு இருமுடி கட்டுவது, மாலையிடுதல் போன்ற பணிகளை செய்வதில்லை என தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
பெண் பக்தர்கள் சபரிமலைக்கு 10 முதல் 50 வயது வரை செல்ல மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர். மேற்கு ரத வீதி மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.அறக்கட்டளை செயலாளர் பிரபு தலைமை வகித்தார். இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முருகேசன், ஒன்றிய தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். குருசாமிகள் காமராஜ், ராம்தாஸ், அழகர்சாமி, சக்கரைபாண்டி, நந்தக்குமார் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.